தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 25,000-ஐ நெருங்கி உள்ள நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் புதுச்சேரியில் இருந்து வருவோர் திருப்பி அனுப்பப்படுகின்றனர். உரிய காரணம் இன்றி தமிழகம் வருவோரை எல்லையில் காவல்துறையினர் நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.
Also Read : ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பி கைது...யார் இவர்?
இதேப் போன்று கன்னியாகுமரியிலும் கேரளாவில் இன்று உரிய காரணமின்றி வருபவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் இரு மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியவசிய பால், மருத்துவ உதவி வசதிகள் உள்ளிட்டவை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.