சென்னை-புதுச்சேரி பேருந்து கட்டணம் ரூ.180.. ஊருக்குள் வருவதற்கு ஆட்டோ கட்டணம் ரூ.100... பயணிகள் வேதனை..

புதுச்சேரியில் அதிக அளவில் தனியார் பேருந்துகள் உள்ளதால் அவற்றை இயக்குவதில் பேருந்து உரிமையாளர்கள் விருப்பம் காட்டவில்லை. கொரோனா காலத்தில் பேருந்து ஓடாத  மாதங்களில் சாலை வரி கட்ட முடியாது என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

சென்னை-புதுச்சேரி பேருந்து கட்டணம் ரூ.180.. ஊருக்குள் வருவதற்கு ஆட்டோ கட்டணம் ரூ.100... பயணிகள் வேதனை..
பேருந்து
  • News18
  • Last Updated: September 16, 2020, 2:57 PM IST
  • Share this:
மாநிலங்களுக்கு இடையே பேருந்து  போக்குவரத்துக்கு இன்னும் அனுமதி கிடைக்காததால் புதுச்சேரி எல்லை வரை மட்டுமே தமிழக பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கில்  தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மாநிலங்களுக்கு இடையே இன்னும் பேருந்து போக்குவரத்து துவங்காத காரணத்தினால் தமிழக பேருந்துகள் புதுச்சேரி எல்லையிலேயே நிறுத்தப்படுகிறது.

சென்னை மற்றும் தமிழக மாவட்டங்களில்  இருந்து வரும் வாகனங்கள் புதுச்சேரியில் எல்லைகளில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கப்படுகிறார்கள்.பேருந்துகள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படாமலே மீண்டும்  காத்திருக்கும் பயணிகளுடன் புறப்பட்டுச் செல்கிறது.


புதுச்சேரி வழியாக தமிழக மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக அனுப்பப்படுகின்றன. ஆனால் அங்கு பேருந்தில் இருந்த பயணிகள் இறக்க அனுமதி இல்லை. இதனால் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மூலமே பொதுமக்கள் புதுச்சேரி நகருக்குள் வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆட்டோவின் கட்டணம் தனி நபர் ஒருவருக்கு 100 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்த வர 185 ரூபாய். ஊருக்குள் ஆட்டோவில் செல்ல 100 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எரிபொருள் விலை ஏற்றத்தால் இதை விட குறைவான கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்க முடியாது என ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். வேறு வழியில்லாமல் மக்கள் கூடுதலாக கட்டணம் செலுத்தி புதுச்சேரி நகருக்குள் வரவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.தமிழகத்தின் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் இருந்து இயக்க வேண்டிய பேருந்துகள் கடலூரிலிருந்து இயக்கப் படுகின்றது என கூறப்பட்டுள்ளது.புதுச்சேரியில் அரசு சார்பில் இயக்க வேண்டிய பேருந்துகள் இன்னும் இயக்கப்படவில்லை. காரணம் புதுச்சேரியில் அதிக அளவில் தனியார் பேருந்துகள் உள்ளதால் அவற்றை இயக்குவதில் பேருந்து உரிமையாளர்கள் விருப்பம் காட்டவில்லை. கொரோனா காலத்தில் பேருந்து ஓடாத  மாதங்களில் சாலை வரி கட்ட முடியாது என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதற்கு அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருப்பதால் சாலை வரி ரத்து செய்ய அனுமதிக்கும் கோப்பினை அரசு விரைவில் கையெழுத்திட இருக்கிறது.அதனை தொடர்ந்து தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

 
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading