• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் அரசு பள்ளிகளைத் தேடி வரும் மாணவர்கள்... சால்வை அணித்து பெற்றோரை வரவேற்கும் ஆசிரியர்கள்...

புதுச்சேரியில் அரசு பள்ளிகளைத் தேடி வரும் மாணவர்கள்... சால்வை அணித்து பெற்றோரை வரவேற்கும் ஆசிரியர்கள்...

புதுச்சேரி அரசுப் பள்ளி

புதுச்சேரி அரசுப் பள்ளி

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளைத் தேடிபெற்றோர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

  • Share this:
புதுச்சேரியில் ஆண்டு தோறும் பெரும்பாலும் அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டும், திறமை வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிக குறைவாக இருந்தது. ஆனால் இதனை கொரோனா புரட்டி போட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் வேலை இன்றி வருமானம் இழந்து தவித்து வருகின்ற வேளையில் தனியார் பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணம் செலுத்த சொல்லி  பெற்றோர்களை வற்புறுத்தி வருகின்றனர்.

இதனால் வருமானம் இன்றி தவித்து வரும்பெற்றோர் அரசு பள்ளியை நாட தொடங்கி விட்டனர். குறிப்பாக கிராமப்புறத்தை சேர்ந்த ஏராளமான ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் அந்த பள்ளிகளில் இருந்து வெளியேறி ஆண்டு தோறும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வரும் மங்கலம் தொகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.

பெற்றோர்கள் அனைவரும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றம் ஆசிரியர்கள் ஏற்பாட்டின் படி மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சேர வந்த பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து ஆசிரியர்கள் மரியாதை செலுத்தினர். மேலும் மாணவர்களுக்கு புத்தகம், எழுதுகோள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரசுப் பள்ளி


தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரமாகவும், உள்கட்டமைப்பு வசதிகளும் இந்த பள்ளிகளில் உள்ளதாலும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத காரணத்தாலும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அனைத்து அரசு பள்ளிகளும் தரமாக உள்ளதாலும், 100 சதவீதம் தேர்ச்சியை பெறுவதால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் என தலைமை ஆசிரியர் தெரிவிக்கிறார்.

புதுச்சேரியை பொருத்தவரை 283 அரசு பள்ளிகளும் 32 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 181 தனியார் பள்ளிகளும் உள்ளன. இதில் அரசு பள்ளிகளில் 32 சதவித மாணவ-மாணவியர் மட்டுமே பயிலுகின்றனர். தனியார் பள்ளிகள் மட்டுமே பெரும் அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கால் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது நல்ல தொடக்கமே. புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகம், புத்தகப்பை, சீருடை துணி மற்றும் தையற்கூலி, காலை உணவு, மதிய உணவு, மிதிவண்டி, மழை அங்கி ஆகியவை வழங்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: