புதுச்சேரியில் கோயிலில் கைவரிசை காட்டிய பெயிண்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி-
கடலூர் எல்லையில் கன்னியக்கோவில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த மாதம் 30ம் தேதி பூசாரி பூஜைகளை முடித்து விட்டு சாப்பிட சென்றுள்ளார். அப்போது, அங்கு பக்தி பழமாக வந்த மர்ம ஒருவர், சாமி கும்மிடுவது போல் சிறிது நேரம் நோட்டமிட்டார்.
பின்னர், யாரும் இல்லாத நேரத்தில், கருவறைக்குள் நுழைந்து அவர், அம்மன் கழுத்தில் இருந்த 9 கிராம் தாலி செயினை திருடிச் சென்றார்.இக்காட்சி கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைராலாகி பரவியது.
இது குறித்து புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அவரது பைக் எண்ணும் தெரியவந்தது. இந்நிலையில், முள்ளோடை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில், அவ்வழியாக சிசிடிவியில் சிக்கிய பைக் எண் கொண்டடி.வி.எஸ்., ஜூப்பிடர் பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அம்மன் தாலியை செயினை திருடியவர் என்பது தெரிய வந்தது.
விசாரணையில், பண்ருட்டி திருவதியை கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 39) என்பதும் பெயிண்டரான இவர் கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் தாலியை திருடிச் சென்றதை ஒப்பு கொண்டார். திருடிய நகையை அடகு வைத்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், தாலியை பறிமுதல் செய்தனர்.
Also Read: சிட்டுக்குருவிகளை காக்க பாடுபடும் புதுச்சேரியின் பட்சிகளின் ராஜன்
மேலும், இவர் மீது வானுார், கோட்டக்குப்பம், மங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கோவில் உண்டியல் உடைப்பு வழக்குகள் உள்ளது.இதில் பல வழக்குகளில் அவர் சிக்கி சிறை சென்றார்.இனி தமிழகத்தில் திருடினால் சிக்குவோம் என நினைத்து புதுச்சேரிக்கு வந்து கைவரிசை காட்டினார்.
Also Read: இரவோடு இரவாக காலியான நகைக்கடை - சதுரங்கவேட்டை பாணியில் கோடிகளை சுருட்டிய கில்லாடி தம்பதி
முதல் குற்றத்திலேயே அவர் சிக்கினார். திருமணமான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் .பெயிண்டர் வேலையில் போதிய சம்பளம் கிடைக்காததால் கடனாளியானதாவும் கடன் தொல்லையை சமாளிக்க கோயில்களில் திருடியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.