ஏப்ரல் 9 முதல் புதுச்சேரி ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை நிறுத்தம்... கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆன்லைனில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்

Youtube Video

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 9-ம் தேதி முதல் புறநோயாளிகள் சிகிச்சை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 237 பேருக்கு கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. 2 மூதாட்டிகள். உயிரிழந்துள்ளனர். மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 686 ஆக உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுமையாக இதுவரை 42,776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது மருத்துவமனையில் 426 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1347 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

  புதுச்சேரியில் மீண்டும் நோய் தொற்று பரவ துவங்கி இருப்பதனால் ஜிப்மர் மருத்துவமனை சில கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளது. மருத்துவமனை மூலம் நோய் பரவுவதை தடுக்கும் விதமாக வரும் 9ஆம் தேதி முதல் அனைத்து மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் முன்பதிவு செய்து ஆலோசனைக்குப் பின்னரே வெளிப்புற சிகிச்சை சேவை வழங்கப்படும்.

  மேலும் படிக்க... 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் : இந்திய மருத்துவ கழகம்

  வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவசர சேவைகள் வழக்கம் போல எந்த முன்பதிவும் இன்றி தொடரும். "hello JIPMER" என்ற செயலி உதவியுடன் வெளிப்புற சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.  மேலும் படிக்க... 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் : இந்திய மருத்துவ கழகம்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: