புதுச்சேரியின் முக்கியமான சாலையில் ஓபிஎஸ் பரப்புரை... ஸ்தம்பித்த போக்குவரத்து...!

5  நிமிடத்தில் தனது பேச்சை ஓபிஎஸ் முடித்துக்கொண்டு புறப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் சீராவதற்கு  அரைமணி நேரம் ஆனது.

Web Desk | news18
Updated: March 28, 2019, 2:29 PM IST
புதுச்சேரியின் முக்கியமான சாலையில் ஓபிஎஸ் பரப்புரை... ஸ்தம்பித்த போக்குவரத்து...!
5  நிமிடத்தில் தனது பேச்சை ஓபிஎஸ் முடித்துக்கொண்டு புறப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் சீராவதற்கு  அரைமணி நேரம் ஆனது.
Web Desk | news18
Updated: March 28, 2019, 2:29 PM IST
புதுச்சேரியில் போக்குவரத்து நிறைந்த பகுதியில் தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ததால்  போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நகரப்பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே அவர் வந்த பிரசார வேன் நிறுத்தப்பட்டது.

புதுச்சேரியில் பரப்புரை செய்யும் ஓபிஎஸ்


அப்போது பேசியவர், மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் நாராயணசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நெடுஞ்செழியன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அந்தப்பகுதி 5 முனை சந்திப்பு சாலை என்பதால் போக்குவரத்து திடீரென ஸ்தம்பித்தது. போலீசார் முயன்றும் போக்குவரத்து நெருக்கடி அதிகமானது. மேலும் அவ்வழியாக ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அதனால் நோயாளிகளும் அவதிக்குள்ளாகினர்.

ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் தவிப்பு


இதை உணர்ந்த ஓபிஎஸ்  தன்னுடைய பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட  உத்தரவிட்டார். 5  நிமிடத்தில் தனது பேச்சை ஓபிஎஸ் முடித்துக்கொண்டு புறப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் சீராவதற்கு  அரைமணி நேரம் ஆனது. போலீசார் கடுமையாக போராடி இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
Also see... தேர்தல் 40/40: தென்காசி தொகுதி ஒரு சிறப்பு பார்வை! 
First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...