அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புதுச்சேரி வருகை தந்துள்ளார். புதுச்சேரியில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித்ஷா பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இதனிடையே அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தைப் புதுச்சேரியின் சாரம் அவ்வை திடலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தினர்.
அடுத்ததாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காமராஜ் சாலையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலையே தந்தை பெரியார் திராவிட கழகம் நிர்வாகி காளிதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீதர், இந்தியத் தேசிய இளைஞர் முன்னணி இயக்கத்தின் தலைவர் கலைபிரியன், புதுச்சேரி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் ஜெபின் உள்ளிட்டோர் காவல் துறையால் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பூமிக்குள் பணம்.. சுவருக்குள் வெள்ளி... அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தொழிலதிபர்
அவர்கள் கறுப்பு பலூன்களை விட திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காமராஜர் சாலை சாரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் இரு சீலிண்டர்கள், கருப்பு பலூன் ஒரு பாக்கெட்டுடன் நின்றிருந்த விற்பனையாளர் ஜெய்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்குப் புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். மேலும் பாதுகாப்புப் பணியில் 1000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.