புதுச்சேரியில் ஒரே கழிவறையை பயன்படுத்தும் 56 கொரோனா நோயாளிகள்

புதுச்சேரிஅரசு கோவிட் மருத்துவமனையில்56 நோயாளிகளுக்கு ஒரே கழிவறை என நோயாளி ஒருவர் பதிவிட்டுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் ஒரே கழிவறையை பயன்படுத்தும் 56 கொரோனா நோயாளிகள்
கதிர்காமம் மருத்துவ கல்லூரி
  • Share this:
கதிர்காமம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனைத்து படுகைகளும் நிரம்பியுள்ளன. ஒரு கழிவறையை 56 பேர் பயன்படுத்தும் அவலநிலையும், சுகாதரமின்மையும் அதிகரித்துள்ளது. எனவே, அரசு உடனடியாக மாற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியை கோவிட் மருத்துவமனையாக அரசு மாற்றி சிகிச்சை அளித்து வருகிறது. இங்கு அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியூ), 7 கோவிட் வார்டு, தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஒன்று, 10 அறைகள் கொண்ட சிறப்பு வார்டு என 600 படுகை வசதிகள் உள்ளன.

இதேபோல், ஜிப்மரிலும் 500 படுகை வசதிகளுடன் தனியாக கோவிட் மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்ததால் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களில் கொரோனா தொற்றால் தினமும் 100 பேர் முதல் 150 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இதனால் அனைவரையும் மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் அடுத்த வாரம் முதல் தினமும் 200 பேர் முதல் 250 பேர் வரை பாதிக்கப்படுவர். அதன்பிறகு நோயாளிகளை அனுமதிக்க இடமில்லாத நிலை ஏற்படும்.

சுகாதாரமற்ற முறையில் இருக்கும் கழிவறை


நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கதிர்காமம் மருத்துவ கல்லூரியை  சுகாதாரமாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் கழிவறைகள், குளியலறைகள் போதிய அளவு இல்லை. தற்போது ஒரு கழிவறையை 56 நோயாளிகள் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.மேலும் படிக்க...அரசு மருத்துவமனையில்தான் பிரசவம் நடக்க வேண்டும் - மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய அதிமுக எம்.எல்.ஏ 

இதனை சிகிச்சை பெற்று வரும் வருவாய் துறை ஊழியர் ஒருவர் படம் எடுத்து ஆடியோவுடன் வெளியிட்டுள்ளார். இவை தற்போது வைரலாகி வருகிறது.3 வது மாடியில் 56 நோயாளிகளுக்கு ஒரே கழிவறை, குளியலறை இருப்பதாகவும் சுகாதாரமற்ற சூழலில் எப்படி சீக்கிரம் குணமடைய முடியும். அந்தமான் சிறை கைதி போல் இருக்கிறோம். வெந்நீர் கிடைப்பதில்லை என அவர் கூறும் புகார்கள் ஆளுநர் முதல் அரசு அதிகாரிகள் வரை அனுப்பப்பட்டுள்ளது.
First published: July 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading