ஓணம் பண்டிகை - தமிழகம் மற்றும் புதுவை முதலமைச்சர்கள் வாழ்த்து

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓணம் பண்டிகை - தமிழகம் மற்றும் புதுவை முதலமைச்சர்கள் வாழ்த்து
ஓணம் பண்டிகை - தமிழக ஆளுநர், தமிழகம் மற்றும் புதுவை முதலமைச்சர்கள் வாழ்த்து
  • Share this:
ஆளுநர் பன்வாரிலால் வெளியிட்டுள்ள ஓணம் வாழ்த்துச் செய்தியில், நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு அன்பு, இரக்கம் மற்றும் உழைப்பை அர்ப்பணிக்க, இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் தீர்மானிப்போம் என்று கூறியுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படும் திருவோண நாளில், மக்கள் அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென வாழ்த்தியுள்ளார். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.Also read: சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் ’ஓணம் திருநாள்’ - மு.க ஸ்டாலின் ஓணம் வாழ்த்து..


புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தனிமனித இடைவெளியுடன் கொண்டாடுமாறும், ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற பொருளுதவியைச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோன்று பாமக தலைவர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
First published: August 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading