• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நியூஸ்18 கருத்துக்கணிப்பு: புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி 27 தொகுதிகள் வரை வென்று ஆட்சியமைக்கும்

நியூஸ்18 கருத்துக்கணிப்பு: புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி 27 தொகுதிகள் வரை வென்று ஆட்சியமைக்கும்

Youtube Video

கேரளாவில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்கும் என்று ஏசியா நெட், நியூஸ்18, சி-வோட்டர் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

  • Share this:
    இந்தியா முழுவதும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள புதுச்சேரியைப் பொறுத்தவரையில், காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. அதேபோல, என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    இந்தநிலையில், ஏசியா நெட், நியூஸ்18, சி வோட்டர் சேர்ந்து நடத்திய கருத்துக்கணிப்பில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிகிறது.

    மார்ச் 5-ம் தேதி முதல் 12-ம் தேதிகளுக்கு இடையில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 30 தொகுதிகளிலும் 5,077 வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில், என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி 52 சதவீத வாக்குகளுடன் 23-27 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி 36 சதவீத வாக்குகளுடன் 3-7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் கணிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்தி இணைந்திருங்கள்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: