புதுவை முன்னாள் முதல்வருக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தொண்டர்

புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கு வித்தியாசமான முறையில் ஒரு தொண்டர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுவை முன்னாள் முதல்வருக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தொண்டர்
புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கு வித்தியாசமான முறையில் ஒரு தொண்டர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • Share this:
புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாள். அதற்கு வாழ்த்துச் சொல்வதற்கு கட் அவுட், பேனர் வைப்பதில் அவரது ஆதரவாளர்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம்.

ஹாலிவுட் முதல் கோலிவுட்  வரை உள்ள நடிகர்களின் முகத்தில் ரங்கசாமியின் முகத்தை வைத்து பேனர்கள் தயாரித்து ஆதரவாளர்கள் மகிழ்வதுண்டு. ஒவ்வொரு ஆகஸ்டு 4ம் தேதியும் அவரது தொகுதி மற்றும் நகரப் பகுதிகளில் பல்வேறு விதங்களில் வைக்கப்படும் பேனர்கள் சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் ஆளாகி வரும்.

Also read: 5 மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பில் மாற்றமில்லை - அமைச்சர் செங்கோட்டையன்


ஆனால், இந்த ஆண்டு அவரது பிறந்தநாள் விழாவைக் கொண்டாட வேண்டாம் என ரங்கசாமி கேட்டுக்கொண்டார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பாலன் உயிரிழப்பு மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக தன் பிறந்தநாளை தொண்டர்கள் கொண்டாட வேண்டாம் என அறிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்து நகரில் பேனர்கள் உள்ளன. இதில் உப்பளம் தொகுதியின் ஆட்டுப்பட்டியைச் சேர்ந்த கட்சி தொண்டர் பாஸ்கர் வித்தியாசமான முறையில் தனது இருசக்கர வாகனம் முழுவதும் ரங்கசாமியின் உருவப் படத்தை வைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வித்தியாசமான விளம்பர பைக்கை பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading