• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Puducherry Assembly Election Result 2021 | புதுச்சேரியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் என்.ஆர்.காங்கிரஸின் ஏகேடி. ஆறுமுகம்...

Puducherry Assembly Election Result 2021 | புதுச்சேரியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் என்.ஆர்.காங்கிரஸின் ஏகேடி. ஆறுமுகம்...

ஏகேடி ஆறுமுகம்

ஏகேடி ஆறுமுகம்

புதுச்சேரியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை என்.ஆர்.காங்கிரஸ் ஏகேடி ஆறுமுகம் பெற்றுள்ளார்.

  • Share this:
புதுச்சேரி காங்கிரசில் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் ஏகேடி ஆறுமுகம். இரு முறை என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமியை எதிர்த்து காங்கிரசில் சார்பில் நின்று தோற்றவர். இம்முறை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ரங்கசாமியின் கோட்டையான இந்திரா நகரில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியின் 30 தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை அவர் தட்டி சென்றுள்ளார்.

இந்திரா நகர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 35,590. இதில் பதிவானவை 28,469. இதில் காங்கிரஸ் வேட்பாளர் கண்ணன் 3310 ஓட்டுக்கள் பெற அவரை விட 18,531 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அடுத்த இடத்தில் கதிர்காமம் என்.ஆர்.காங் ரமேஷ் 12,246 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மூன்றாவது இடம் காரை தெற்கு தொகுதி திமுக நாஜிம்-12,034 பெற்றார்.

இதில் 4வது இடத்தில் மணவெளி-பாஜக செல்வம்-8132, 5வது இடத்தில் காமராஜ் நகர்-பாஜக ஜான்குமார்-7229, 6வது இடத்தில் வில்லியனூர்- திமுக சிவா-6950,  7வது இடத்தில் நெட்டப்பாக்கம் -  என்.ஆர்.காங் ராஜவேலு-6647, 8வது இடத்தில் லாஸ்பேட்டை- காங் வைத்தியநாதன்-5701, 9வது இடத்தில் நிரவி- திமுக நாக தியாகராஜன்-5511, 10வது இடத்தில் தட்டாஞ்சாவடி- என்.ஆர்.காங் ரங்கசாமி-5291 இடம் பெற்றுள்ளனர்.

இதே போல் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்..

1.காரைக்கால் வடக்கு-என்.காங் திருமுருகன்-135
2.பாகூர்-திமுக செந்தில்குமார்-278
3.மாகி-காங்கிரஸ் வேட்பாளர்-ரமேஷ் பரம்பத்-234
4.நெல்லித்தோப்பு-பாஜக-விவியன் ரிச்சட்-496
5.ஏனாம்-சுயே கொல்லப்பள்ளி சீனீவாச அசோக்-646
6.முத்தியால்பேட்டை-சுயே பிரகாஷ்குமார்-997.

மேலும் படிக்க... TN Assembly Election Result 2021 Latest Update : போடி தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின் ஓபிஎஸ் வெற்றி



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: