தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வேட்புமனு பரிசீலனை

தேர்தல் ஆணையம்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் 6,319 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

 • Share this:
  தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் 6,319 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் ஆண்கள் 5,363 பேரும், பெண்கள் 953 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் திருநங்கைகள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் புதுச்சேரியில் 450 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

  இந்நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரீசிலனை இன்று நடைபெறுகின்றன. இதில் தகுதி உள்ள மனுக்கள் ஏற்கப்பட்டு மாலையில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்ற விவரம் வெளியிடப்படும். மேலும் வேட்பு மனுக்களை வரும் 22ம் தேதி மாலைக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  மேலும் படிக்க... கொரோனா பரவியதால் தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு அபராதம்... வழக்கு பதிவு  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: