• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பு மனு தாக்கல் துவக்கம்...

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பு மனு தாக்கல் துவக்கம்...

புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிதலைவர், கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல்இன்று தொடங்கியது.

  • Share this:
புதுச்சேரி 2ஆவது முறையாக 3 கட்டமாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நவம்பர் 2ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. புதுச்சேரி-உழவர்கரை நகராட்சியில் இரு  தலைவர்கள், 75 கவுன்சிலர் பதவிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடக்கிறது.

புதுச்சேரி நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட 33 கவுன்சிலர் பதவிகளுக்கு பலரும் வேட்புமனுவை பெற்றுச்சென்றனர்.

இதேபோல உழவர்கரை நகராட்சி தலைவர், 42 கவுன்சிலர் பதவிகளுக்கு காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.அங்கும் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட கவுன்சிலர் பதவிக்கு பலரும் வேட்பமனுக்களை பெற்றுச் சென்றனர். வேட்பு மனு தாக்கலுக்கு 18ஆம் தேதி கடைசிநாள். 20ஆம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். 22ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ்பெற கடைசிநாளாகும்.

ஒருபுறம் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு ரத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வர்த்தகசபை, வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, வணிகர் பேரமைப்பினர், பண்டிகை காலத்தில் தேர்தலை நடத்துவதால் வியாபாரம் பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என மனுவும் அளித்துள்ளனர்.

Must Read : மாநில தேர்தல் ஆணையரை கண்டித்து புதுச்சேரியில் பந்த்..

பாரதிதாசன் மகளிர் கல்லூரி, புதுச்சேரி


இருப்பினும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தபடி முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: