• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Coronavirus Night Curfew | கேரளா, புதுச்சேரியிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு...

Coronavirus Night Curfew | கேரளா, புதுச்சேரியிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

  • Share this:
    புதுச்சேரியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், உணவகங்களில் இரவு எட்டு மணிக்கு பிறகு பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு பின்னர் முடிவு எடுக்கப்படும், திருமண விழாக்களில் 100 பேரும், இறுதிச் சடங்குகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி எனவும் தமிழிசை சவுந்தரராஜன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் சந்தைகளை திறந்த வெளியில் மாற்றவும், மாலை 5 மணிக்கு கடற்கரையை மூடவும் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

    டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நேற்று ஒரே நாளில் 23686 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 24 மணி நேரத்தில் 240 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு வார முழு ஊரடங்கு நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது.

    மேலும் படிக்க... இராஜபாளையம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட சண்டை 2 பிரிவினரின் மோதலாக மாறியது... எப்படி?

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கேரள மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பொது போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: