புதுச்சேரியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு - துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

புதுச்சேரியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு - துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

இரவு ஊரடங்கு Image: Parikh Mahendra N / Shutterstock.com

திருமண விழாக்களில் 100 பேரும், இறுதிச் சடங்குகளில் 50 பேருக்கு மட்டுமே அனமதி

 • Share this:
  புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

  புதுச்சேரியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும்,
  உணவகங்களில் இரவு எட்டு மணிக்கு பிறகு பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  வழிபாட்டுத் தளங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு பின்னர் குடிவு எடுக்கப்படும், திருமண விழாக்களில் 100 பேரும், இறுதிச் சடங்குகளில் 50 பேருக்கு மட்டுமே அனமதி எனவும் தமிழிசை சவுந்தரராஜன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

  தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் சந்தைகளை திறந்த வெளியில் மாற்றவும், மாலை 5 மணிக்கு கடற்கரையை மூடவும் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: