• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 320 கோடி ரூபாயில் புதிய சட்டப்பேரவை வளாகம்!

320 கோடி ரூபாயில் புதிய சட்டப்பேரவை வளாகம்!

320 கோடி ரூபாயில் புதிய சட்டபேரவை வளாகம்!

320 கோடி ரூபாயில் புதிய சட்டபேரவை வளாகம்!

புதிய சட்டப்பேரவை வளாகம் அமைய உள்ள இடத்தில் தற்போது இயங்கி வரும் அரசுத் தறைகளின் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம்  தலைமையில் நடைபெற்றது.

  • Share this:
புதுச்சேரியில் ரூ.320 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய சட்டப்பேரவை வளாகத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் ஆகஸ்ட் மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளதாக புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சபாநாயகர் செல்வம், சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது புதுச்சேரி மாநிலத்தில் ரூ. 320 கோடியில் புதிய ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு ஒப்புதல் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்திற்கு ஒருங்கிணைந்த சட்டப்பேரவையை தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு இடத்தில் கட்டுவது தொடர்பாக சபாநாயகர் செல்வம்  தலைமையில் இன்று மாலை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச்செயலர் அஸ்வனிகுமார் முன்னிலை வகித்தார். துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து சபாநாயகர் செல்வம், புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்"  என அரசு செயலர்களிடம் கூறினார்.

புதிய சட்டப்பேரவை வளாகம் அமைய உள்ள இடத்தில் தற்போது இயங்கி வரும் அரசுத் தறைகளின் அதிகாரிகளின் ஆலோசனை


முன்னதாக புதிய சட்டப்பேரவை வளாகம் அமைய உள்ள இடத்தில் தற்போது இயங்கி வரும் அரசுத் தறைகளின் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தற்போது இயங்கி வரும் அரசுத் துறை அலுவலகங்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இது பற்றி சபாநாயகர் செல்வம் கூறுகையில்," புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை அடிக்கல் நாட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 15க்கு பிறகு நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்ட உள்ளார்.  சட்டப்பேரவை வளாகத்தினுள் தலைமைச்செயலகம், இயக்குநர் அலுவலகம் ஆகியவை ஒரே இடத்தில் அமையும். 16 மாதத்திற்குள் புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டி முடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Also read: புதுச்சேரி ரயில் பாதையில் நாட்டு வெடிகுண்டு சோதனை: ரவுடிகளுக்கு போலீஸ் வலை

புதிய சட்டப் பேரவை அலுவலகம் கட்டுவதற்கு, மக்களவைத் தலைவர் வாயிலாக, மத்திய அரசிடம் 360 கோடி ரூபாய் நிதி உதவி கேட்டிருந்தோம். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சட்டப் பேரவை அலுவலக கட்டடம், புதுச்சேரி தட்டாஞ்சாவடி வணிக வளாகப்பகுதியில் உள்ள 15 ஏக்கர் இடத்தில் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு பிரமாண்ட சட்டப்பேரவை அலுவலகம் கட்டுவதற்கு, அரசுத்துறை அதிகாரிகள், முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை பெறுவதற்கு, அடுத்த வாரம் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் டெல்லி செல்கிறோம். மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி ஒப்புதல் பெற்று வர உள்ளோம்.

தொடர்ந்து, ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு மேல் உள்துறை அமைச்சர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது என்றும் அதற்காக ஆயத்தப்பணி மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது. 16 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகமும் அந்த வளாகத்தில் அமையும் என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: