• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருத்துவமனை... முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருத்துவமனை... முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருத்துவமனை கட்டப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரி ரத்த தானம் கொடுப்பவர்களைக் கவுரவிக்கும் பொருட்டும் ரத்த தானத்தை ஊக்குவிக்கும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய ரத்த தான மாதமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வாண்டு நவம்பர் மாதம் 15ந் தேதி ரத்த தான மாத விழா இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்தது. விழாவிற்கு ரமேஷ் எம்எல்ஏ தலைமை தாங்கிட முதல் அமைச்சர் ரங்கசாமி விழாவைத் தொடங்கி வைத்து கடந்த அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2021 வரை சிறந்த முறையில் ரத்த தான முகாம்கள் நடத்திய 4 அமைப்புகளுக்கும், இரண்டு முறை முதல் எட்டு முறை வரை ரத்த தானம் செய்த 4 தன்னார்வலருக்கும் நினைவுப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார்.

மேலும் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரசு மருத்துவ கல்லூரியில் புதிதாக நிறுவப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். பின்னர் பேசிய அவர், நீண்ட நாட்களாக எம்ஆர்ஐ ஸ்கேன் இல்லாமல் இருந்தது. ரூ. 6 கோடியில் தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி இல்லையென்றால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டு இருக்கும். நிறைய பேர் தடுப்பூசி போட மறுக்கின்றனர்.

ஆனால் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க முடியும்.நூறு சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக புதுச்சேரி மாற வேண்டும் என கூறினார்.

கொரோனா தொற்று வரும்போது அரசு மருத்துவ கல்லூரியில் மற்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. இதனால் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதுச்சேரி அரசு விரைவில் புதிதாக ஒரு மருத்துவமனையை கட்ட முடிவு எடுத்துள்ளது என கூறிய முதல் அமைச்சர், இதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம். இக்கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும் என்றும் ரங்கசாமி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் சித்ரா தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: