• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கடைகள் அடைப்பு, வாகனங்கள் ஓடவில்லை

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கடைகள் அடைப்பு, வாகனங்கள் ஓடவில்லை

புதுச்சேரியில் கடைகள் அடைப்பு

புதுச்சேரியில் கடைகள் அடைப்பு

புதுச்சேரியில் அரசு பேருந்துகள் காவல்துறையின் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன.

  • Share this:
    மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவம் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்த்திற்கு அழைப்பு விடுத்தன. அதனை ஏற்று, புதுச்சேரியில் கடைகள் மூடப்பட்டு உள்ளன. மேலும் பேருந்துகள் ஆட்டோ, டெம்போ, உள்ளிட்ட வாகனங்களும் ஓடாததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

    மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதியில் 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் விவசாயிகளின் கோரிக்கையான 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், விவசாயிகளின் இந்த போராட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்த ஓராண்டு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்புவிடுத்தன. இந்த பேராட்டம், நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கமைள மூடுவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பாஜக அரசால் இயற்றப்பட்டுள்ள 3 வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும், என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் நேரு வீதி, அண்ணாசாலை ,காந்தி வீதி, காமராஜர் சாலை, உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் அரசு பேருந்துகள் காவல்துறையின் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன.

    பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்


    தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. மேலும், காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முழு அடைப்பு போராட்ட அழைப்பை ஏற்று ஆட்டோக்கள், டெம்போ என எதுவும் இயங்கவில்லை. இதனால் புதுச்சேரியில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    போஸ்டர்


    Must Read : விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்

    இதேபோல, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், திருவாரூர், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், கொரடாச்சேரி, கோட்டூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: