மக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லை..! - கண்கலங்கிய முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் நடந்தகாங்கிரஸ் கூட்டத்தில்  முதல்வர் நாராயணசாமி கண் கலங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது..

மக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லை..! - கண்கலங்கிய முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
  • Share this:
புதுச்சேரியில், கட்சியின் டிஜிட்டல் உறுப்பினர் முகாமில் நேற்று கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “மக்களுக்கும் எதும் செய்ய முடியவில்லை. கட்சிக்கும் எதுவும் செய்ய முடியவில்லை.எதற்கு இந்த ஆட்சி’” என்று பேசியுள்ளார்.

டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கும் முகாமை புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி நேற்று துவங்கியது. இதில் பேசிய முதல்வர்,இலவச அரிசி விவகாரத்தை சுட்டிகாட்டி, ’இன்று ஒரு கறுப்பு தினம். மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் தருவதில்லை. நீதிமன்றமாவது நமக்கு உதவும் என பார்த்தும் ஒத்துழைப்பு இல்லை. இந்த ஆட்சி இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான்’ என கூறினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை வெளியே அனுப்பிய முதல்வர் கண் கலங்கி குரல் தழுதழுத்து, ’மக்களுக்கும் எதும் செய்ய முடியவில்லை. கட்சிக்கும் எதுவும் செய்ய முடியவில்லை.எதற்கு இந்த ஆட்சி’ என பேசினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.


Also See...
First published: February 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்