ஹோம் /நியூஸ் /இந்தியா /

Pegasus : செல்போனை ஒட்டுக்கேட்டு ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு

Pegasus : செல்போனை ஒட்டுக்கேட்டு ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு

நாராயணசாமி

நாராயணசாமி

செல்போன்களை ஒட்டுகேட்டு பல ஆண்டுகளாக ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு பயன்படுத்தி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இஸ்ரேலில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை நரேந்திர மோடி அரசானது மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கி அனைவரின் செல்போனை ஒட்டுக்கேட்டு பல ஆண்டுகளாக ஆட்சி கவிழ்ப் நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தி வருவதாகவும், எனவே உடனடியாக நாடாளுமன்ற நிலை குழு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்பதால் நரேந்திர மோடி அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை எனவும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  இது தொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “நமது நாட்டில் தற்போது செல்போன் ஒட்டு கேட்பு சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளதாகவும், இஸ்ரேல் நிறுவனமாக உள்ள என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்துள்ள பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் பலரது செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டுள்ளதாகவும், இது மிகப்பெரிய ஊழல் என்றும், இதை பல ஆண்டுகளாக ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு பயன்படுத்தி வருகிறது என்றும், பலரது ரகசிங்களை தெரிந்துகொள்ளவும் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

  Must Read : ஆளுநராகிறாரா எடியூரப்பா..? கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்?

  தனியார் நிறுவனத்திற்கு இந்த மென்பொருளை கொடுக்கமாட்டோம் என்றும், ஒரு அரசு கேட்டால் மட்டுமே கொடுப்போம் என இஸ்ரேல் நிறுவனம் கூறியுள்ளதாகவும், இதில் இருந்து இந்திய நாட்டில் நரேந்திர மோடி அரசானது பெரிய விலையை கொடுத்து அந்த மென்பொருளை வாங்கி அனைவரின் செல்போனையும் ஒட்டுகேட்டுள்ளதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  மேலும், நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற நிலை குழு வைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதனை நரேந்திர மோடி அரசு செவிசாய்க்கவில்லை என்றும், மத்திய அரசு தவறு செய்த காரணத்தால்தான் உளவுபார்த்த காரணத்தால்தான் அந்த விசாரணைக்கு நரேந்திர மோடி அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஜனநாயக துரோகம் என்றும், பெகாசஸ் மென்பொருள் வாங்கியது யார், எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற நிலை குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நரேந்திர மோடி அரசு அந்த சட்டங்களை திரும்ப் பெறமால் இருப்பதாகவும், எனவே 3 விவசாய விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் கூறினார். மேலும், கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு என தனியாக வார்டு அமைக்க வேண்டும் என்றும், மாநில அரசு தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறிய நாராயணசாமி, சண்டே மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக கூடுவதாகவும், மாவட்ட நிர்வாகம் என்ன செய்துகொண்டிருக்கிறது?, புதுச்சேரி மாநில அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Narayana samy, Narendra Modi, Puducherry