ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரியங்கா காந்தி கைது : புதுச்சேரியில் நாராயணசாமி மறியல் போராட்டம்

பிரியங்கா காந்தி கைது : புதுச்சேரியில் நாராயணசாமி மறியல் போராட்டம்

நாராயணசாமி போராட்டம்

நாராயணசாமி போராட்டம்

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கைது செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க பன்வீர்பூர் கிராமத்திற்கு  சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்தும் விவசாயிகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை  தடுக்க தவறிய உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்தும் புதுச்சேரி காங்கிரசார் காமராஜர் சிலை நான்குமுனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உத்திரபிரதேச பாஜக அரசை கண்டித்தும், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசை கண்டித்தும், கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, விவசாயிகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தடுக்க தவறிவிட்டார். இதற்கு மாறாக அவசரகால நிலை உத்திரப்பிரதேசத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக பதவி விலக வேண்டும்.

விவசாயிகள் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இதற்கு  தார்மீக பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ராஜினாமா செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட காங்கிரசாரை  விடுவிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.

Must Read : உ.பி வன்முறை: விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப் பதிவு

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள்  உட்பட  மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார்  கைது செய்தனர்.

First published:

Tags: Narayana samy, Priyanka gandhi, Puducherry