முகப்பு /செய்தி /இந்தியா / பள்ளிவாசலுக்குள் இப்தார் விருந்து நடத்த எதிர்ப்பு.. வீதியில் நடந்த திமுக விருந்து

பள்ளிவாசலுக்குள் இப்தார் விருந்து நடத்த எதிர்ப்பு.. வீதியில் நடந்த திமுக விருந்து

தி.மு.க., சார்பில் நடக்க இருந்த இப்தார் நோன்பு

தி.மு.க., சார்பில் நடக்க இருந்த இப்தார் நோன்பு

தி.மு.க., சார்பில் பள்ளி வாசலில் நடக்க இருந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, பள்ளிவாசலுக்கு வெளியே நடந்தது.

  • Last Updated :

புதுச்சேரியில் பள்ளிவாசலில் தி.மு.க., சார்பில் நடக்க இருந்த இப்தார் நோன்பு திறப்பிற்கு பள்ளிவாசல் நிர்வாகத்தை சேர்ந்த ஒரு தரப்பு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பள்ளிவாசலுக்கு வெளியே  இப்தார் நோன்பு திறப்பு நடைபெற்றது.

மண்ணாடிப்பட்டு தொகுதி தி.மு.க., சார்பில் திருக்கனுார் பள்ளி வாசலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று(1ம் தேதி)  ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பள்ளிவாசல் நிர்வாகத்தை சேர்ந்த ஒரு தரப்பினர், அரசியல் கட்சி சார்பில் பள்ளி வாசலுக்குள் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பதற்றமான சூழ்நிலை நிலவியதால்,  20க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதற்கிடையே, தி.மு.க., சார்பில் பள்ளி வாசலில் நடக்க இருந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, பள்ளிவாசலுக்கு வெளியே நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தி.மு.க., மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ., க்கள் அனிபால் கென்னடி, சம்பத்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

top videos

    புதுச்சேரி பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., சார்பில் திருக்கனுார் பள்ளிவாசல் எதிரே நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டார். இதே போல், கடந்த சில தினங்களுக்கு முன் மண்ணாடிப்பட்டு கிராமத்தில் வி.சி.க கட்சி சார்பில் நடந்த அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிலும் முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: DMK, Iftar Special Recipes, Muslim, Ramzan