Home /News /national /

டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க முதல்வர் ரங்கசாமிக்கு தயக்கம் - காங் எம்.பி குற்றச்சாட்டு!

டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க முதல்வர் ரங்கசாமிக்கு தயக்கம் - காங் எம்.பி குற்றச்சாட்டு!

காங் எம்பி வைத்திலிங்கம்

காங் எம்பி வைத்திலிங்கம்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்-பாஜக கூட்டணி அமைந்து ஓராண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியின் முதல்வரான ரங்கசாமி இன்னும் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவில்லை.

  • News18
  • Last Updated :
டெல்லி  செல்ல புதுச்சேரிமுதல்வர் ரங்கசாமி  தயக்கம் காட்டுவதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுவதாக காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்-பாஜக கூட்டணி அமைந்து ஓராண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியின் முதல்வரான ரங்கசாமி இன்னும் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு இன்னும் மத்திய அரசு தான் நிதியுதவி அளிக்கிறது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் புதுச்சேரி இருந்தும் ரங்கசாமி இன்னும் பிரதமரை சந்திக்கவில்லை. இதனால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. மாநில வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனை சுட்டிகாட்டி புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இதனால் மத்திய அரசின் நிதியுதவியையே புதுச்சேரி அதிகம் நம்பியுள்ளது. அதனால் மத்தியில் உள்ள பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரை அடிக்கடி சந்தித்து புதுச்சேரியின் தேவைகள் குறித்து ஞாபகப்படுத்தி, கேட்டுப் பெற வேண்டிய அவசியமான நிலை இருந்து வருகிறது.

ஆனால் புதுச்சேரியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியின் முதல்வரான  ரங்கசாமி, டெல்லி செல்லவே தயங்கி வருகின்றார். ஆட்சிக்கு வந்து ஓராண்டாகவுள்ள நிலையிலும் கூட இதுவரை முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று புதுச்சேரியின் தேவைகள் குறித்து பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தவில்லை.

அதேசமயம் மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் புதுச்சேரிக்கு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் இருந்து வருகின்றனர். புதுச்சேரி அரசுக்கு குரூப் சி மற்றும் டி பணியிடங்கள் மட்டுமே நிரப்ப அனுமதி இருந்தது.

இந்நிலையில் குரூப் டி பணியிடங்கள் நீக்கப்பட்டுவிட்டது. அதேசமயம் குரூப் சியிலும் சில பணியிடங்கள் அரசிதழ் பதிவு பெற்ற பணியிடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. இதனால் அந்த பணியிடங்களும் யூபிஎஸ்சி மூலம் நிரப்பப்படுமோ என்ற அச்சம் புதுச்சேரி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதனை புரிந்து கொண்ட பாஜக கடந்த தேர்தலில் புதுச்சேரி அரசில் உள்ள இடங்களை நிரப்ப தனி தேர்வாணையம் அமைக்கப்படும் என்று அறிவித்தது. அதுபோல் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஜம்மு காஷ்மீரைப்போல் மத்திய அரசின் பங்கு 70 சதவீதமாகவும், மாநில அரசின் பங்கு 30 சதவீதமாகவும் இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னரும் இவைகளை நிறைவேற்றாமல் உள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 24ம் தேதி புதுச்சேரி வரவுள்ளார். புதுச்சேரி பாஜகவினரின் ஆலோசனைகளின் பேரில் அக்கட்சியின் தேர்தல் அறிவிப்புகளில் புதுச்சேரியின் கோரிக்கைகள் சேர்க்கப்பட்டிருக்கும். எனவே, புதுச்சேரி வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புதுச்சேரி பாஜகவினர் தேர்தல் அறிவிப்புகள் அனைத்தையும் நிறைவேற்றக்கோரி மனு அளித்து வலியுறுத்த வேண்டும்.

Also read... கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்பான வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதுபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலின்போது பாஜக கட்சி சார்பில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள், பிரதமர் மற்றும் தான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு தனக்கும் பங்கும், கடமையும் உள்ளது என்பதை உணர்ந்து, சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

குறைந்த பட்சம் இந்த வருகைக்காக புதுச்சேரிக்கு தனி தேர்வாணையம், மத்திய அரசின் நிதியுதவியை 70 சதவீதமாகவும் உயர்த்தி வழங்குவது ஆகிய 2 அறிவிப்புகளையாவது நிறைவேற்றித்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி