• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சிகப்பு நிற ரேஷன் கார்டு இருந்தால்தான் இலவச சிகிச்சையா?- ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்புக்கு எம்.பி ரவிக்குமார் கடும் கண்டனம்

சிகப்பு நிற ரேஷன் கார்டு இருந்தால்தான் இலவச சிகிச்சையா?- ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்புக்கு எம்.பி ரவிக்குமார் கடும் கண்டனம்

ஜிப்மர் மருத்துவமனை

ஜிப்மர் மருத்துவமனை

ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சைப் பெறுவதற்கு சிகப்பு நிற குடும்ப அட்டை வைத்திருக்க வேண்டும் என்று அம்மருத்துவமனை இயக்குநர் பிறப்பித்த உத்தரவுக்கு எம்.பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஜிப்மர் நிறுவனம் புதுச்சேரியில் 1823ல் துவக்கப்பட்டது. தற்போது 2,300 படுக்கை வசதிகளுடன் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையாக ஜிப்மர் இயங்கி வருகிறது. தினமும் 8,000 வெளி நோயாளிகள், 2,000 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். பல மாநிலத்தைச் சேர்ந்த ஏழை மக்களும் இங்கு வந்து சிகிச்சைப் பெற்று பயனடைந்துவருகின்றனர்.

    இந்தநிலையில் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதுச்சேரியின் வறுமைக் கோடு அளவீட்டின்படி ஜிப்மர் மருத்துவமனையில் மாதத்துக்கு 2,499 ரூபாய்க்கு குறைவான வருமானம் கொண்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்படுகிறது. ஜிப்மர் தேசிய முக்கியவத்துவம் வாய்ந்த மருத்துவமனையாக உருவெடுத்ததிலிருந்து இந்தியா முழுவதிலுமிருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். இந்தியாவின் எந்த மாநிலங்களிலிருந்து வரும் வெளிநோயாளிகள் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அட்டைவைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை வழங்கப்படும்.

    இலவச சிகிச்சைப் பெறுவதற்கு அந்தந்த மாநில அரசு வழங்கிய வறுமை கோடிற்கு கீழுள்ளவர்களுக்கான ரேஷன் அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும். அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு மருத்துவமனையில் கட்டணம் நிர்ணயம் செய்யும் அறிவிப்பு பொதுமக்களிடையை கோபத்தை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எம்.பி ரவிக்குமார் விடுத்த அறிக்கையில், ‘ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டிக்கிறேன். ஜிப்மர் மருத்துவமனையில் மாதத்துக்கு 2499/- ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இலவச சிகிச்சை வழங்கப்படுமென்றும், வெளிப்புற நோயாளியாக சிகிச்சைபெற வருபவர்கள்கூட தங்களது வருமானத்தை மெய்ப்பிப்பதற்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் என்ற (BPL)ரேஷன் கார்டை கையோடு எடுத்துவர வேண்டுமென்றும் ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


    எல்லாவிதமான சிகிச்சைகளுக்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது. ஜிப்மர் மருத்துவமனை அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்யுவமனையா? சிகிச்சை பெற வரும் நோயாளி கையோடு ரேஷன் கார்டை எடுத்துவர வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமின்றி சட்சவிரோதமானதும்கூட. இந்த உத்தரவைப் பிறப்பித்த இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டுமென ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: