Home /News /national /

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 60% மருத்துவர்களுக்கு தொற்று - தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 60% மருத்துவர்களுக்கு தொற்று - தமிழிசை சௌந்தரராஜன்!

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

60%க்கும் மேலாக மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அதனால் சாதாரண அறிகுறிகளோடு வரும் நோயாளிகளை முழுமையாக கவனிக்க இயலவில்லை என்று மருட்துவர்கள் தெரிவித்தார்கள்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 60 சதவீதத்திற்கு மேலாக மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா இன்று  கொண்டாடப்பட்டது.லாஸ்பேட்டையில் உள்ள நேதாஜி சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை அடைகிறேன். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது சிலை தில்லியில் நிறுவப்பட இருக்கிறது. இது நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பதாக அமையும்.

சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதன் விளைவாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். அவரைப் பின்பற்றி இளைஞர்கள் நினைத்ததை தீவிரமாக செயலாற்றி வெற்றி பெற வேண்டும் என்பதை தான் பாரதப் பிரதமர் சொல்லி வருகிறார் என குறிப்பிட்டார்.

கொரோனா சூழலில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மற்ற மாநிலங்களில் இருப்பதைப்போலவே புதுச்சேரியிலும் தொற்று அதிகரித்திருக்கிறது. புதுச்சேரியில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தளர்வுகளோடு கூடிய அடைப்பை அறிவிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் முழு அடைப்பு இருக்கிறது. மக்கள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்தால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதற்காகதான் புதுச்சேரியில் தளர்வுகளோடு கூடிய அடைப்பு அறிவிக்கப்பட்டது. மக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்ற கோரிக்கையோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தமிழிசை தெரிவித்தார்.

மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. நோய்த் தொற்று அதிகம் இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது மிகவும் ஆறுதலான செய்தி என கூறிய தமிழிசை, இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மரணம் ஏற்பட்டிருக்கிறது. புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது என்றார்.

Also read... கொரோனா தொற்று குறைந்தால் வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது: அமைச்சர் மா.சு!

ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமங்கள் இருப்பதாக அறிந்து அதிகாரிகளுடன் பேசினேன். ஜிப்மர் இயக்குனர் மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்து விளக்கம் அளித்தார்கள். 60%க்கும் மேலாக மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அதனால் சாதாரண அறிகுறிகளோடு வரும் நோயாளிகளை முழுமையாக கவனிக்க இயலவில்லை என்றும் தெரிவித்தார்கள். எத்தகைய சூழ்நிலையிலும் நோயாளிகள் பாதிப்பு அடையாத வகையில் மருத்துவச் சேவையை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். அதனால் அவசர சிகிச்சையும், அவசியமான சிகிச்சையும் ஜிப்மர் மருத்துவமனையிலும் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிற மருத்துவமனைகளில்  மறுக்கப்படாது என்றும் தெரிவித்தார்.

 
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Corona, Pondicherry

அடுத்த செய்தி