புதுச்சேரியில் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...!

கோப்புப் படம்

குழந்தைகளை வெளியில் கூட்டிச்செல்வதும், உறவினர்களை வீட்டிற்கு அழைப்பதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழிசை கேட்டுக்கொண்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    புதுச்சேரியில் 2 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வறிக்கை வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    புதுச்சேரியில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் சூழலில், பொதுமக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் ஜுலை 15ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 21 குழந்தைகளில், 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் 5 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட 4 குழந்தைகளும் அடங்குவர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதேபோல 16ம் தேதி புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 13 குழந்தைகளில், 9 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்துள்ளது.

    இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 7 பேர் எனவும், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்மார்களின் 4 குழந்தைகள் இருப்பதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக பேசிய புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், குழந்தைகளுக்கு தொற்று பரவுவதை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றார். தாய்மார்கள் மற்றும் பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவுவது குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

    Also read... கொரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் - பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

    தொற்று பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 60 படுக்கைகள், வென்டிலேட்டர்கள் தயாராக உள்ளதாகவும் சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்தார்.

    இதனிடையே கொரோனா தடுப்பு சீராய்வுக் கூட்டம், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தமிழிசை, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கவலையளிப்பதாக தெரிவித்தார்.

    குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறித்து முழுமையான ஆய்வறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட அவர், சூழ்நிலையைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குழந்தைகளை வெளியில் கூட்டிச்செல்வதும், உறவினர்களை வீட்டிற்கு அழைப்பதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் தமிழிசை கேட்டுக்கொண்டார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: