ஒரு மெசேஜை நம்பி ஒரு லட்சத்தை இழந்த மருத்துவர்... நீங்களும் உஷாரா இருங்க..
ஒரு மெசேஜை நம்பி ஒரு லட்சத்தை இழந்த மருத்துவர்... நீங்களும் உஷாரா இருங்க..
மாதிரி படம்
செல்போன் எண்ணுக்கு கடந்த 12-ம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவரது வங்கி கணக்கில் பான் எண்ணை இணைப்பதற்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. உடனே அவரும் அந்த லிங்கிற்கு சென்று பார்வையிட்டார். அப்போது, ஓடிபி ஒன்றும் வந்துள்ளது. அதனை அவர் அந்த லிங்கில் சென்று செலுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் மருத்துவர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருடப்பட்டுள்ளது.
புதுச்சேரி விவேகானந்தா நகர் விரிவாக்க பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் சீனிவாசன். இவர் புதுச்சேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 12-ம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவரது வங்கி கணக்கு உடன் பான் எண்ணை இணைப்பதற்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. உடனே அவரும் அந்த லிங்கிற்கு சென்று பார்வையிட்டார். அப்போது, ஓடிபி ஒன்றும் வந்துள்ளது. அதனை அவர் அந்த லிங்கில் சென்று செலுத்தியுள்ளார்.
அதன் பிறகு வங்கி கணக்கில் இருந்த பணம் குறையத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது வங்கி கணக்கு இருப்பை சரிபார்த்தபோது, முதலாவதாக ரூ.72000, 2-ம் முறையாக ரூ.25000, 3-ம் முறையாக ரூ.6,500ம் என மொத்தம் ரூ.1,03,500 பணம் திருடப்பட்டிருந்ததும், மர்ம நபர்கள் இணையதளம் வழியாக நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து சீனிவாசன் புதுச்சேரி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற அதிகாரப்பூர்வமற்ற மெசேஜ்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் அதில் உள்ள லிங்க்கை திறக்க முயற்சிக்கக் கூடாது என்றும் வங்கி தரப்பிலும் போலீசார் தரப்பிலும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், அதையும் தாண்டி ஒருசில சந்தர்ப்பங்களில் இதுபோன்ற பண இழப்பு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.