Home /News /national /

பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்!

பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்!

பள்ளி மாணவிகள்

பள்ளி மாணவிகள்

பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தை போல், புதுச்சேரியிலும் வரு செப்.1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. சுழற்சி முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல் அளித்துள்ளார். கல்வி தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு பின்பற்றுகிறது என்று ரங்கசாமி தெரிவித்திருந்தார்.

    இதனிடையே, புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரின் தமிழ் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டதொடர், முதல்வர் தாக்கல் செய்த மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அப்போது சுயேச்சை எம்எல்ஏ பி.ஆர்.சிவா குறுக்கிட்டு, ''பள்ளிகள் திறப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளிக்க முடியாது. நம்மிடம் அதற்குப் போதிய வசதிகள் இல்லை. எனவே பள்ளிகள் திறப்பை ஒரு மாதம் தள்ளிப்போட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

    Also read: பள்ளிகளை திறக்க வேண்டாம் - எய்ம்ஸ் பேராசிரியர் எச்சரிக்கை.!

    அப்போது கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், புதுவையில் என்ன வசதிகள் இல்லை? அனைத்து வசதிகளும் புதுவையில் கிடைக்கின்றன என்று தெரிவித்தார்.

    அதற்கு பி.ஆர்.சிவா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரியவர்கள் பலரும் தமிழகம் சென்று சிகிச்சை பெற்றனர். குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

    இதே கருத்தை திமுக எம்எல்ஏ நாஜிம் குறிப்பிட்டுப் பேசுகையில், பள்ளிகள் திறப்பு குறித்துத் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். அதில் எடுக்கும் முடிவை புதுச்சேரியிலும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: News On Instagram, Puducherry

    அடுத்த செய்தி