அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தார் நமச்சிவாயம்
நமச்சிவாயம் கட்சிக்கு துரோகம் இழைத்ததால், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுக்கடுவதாக சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நமச்சிவாயம்
- News18 Tamil
- Last Updated: January 25, 2021, 2:48 PM IST
அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்டுள்ளதாக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தார் நமச்சிவாயம்.
நமச்சிவாயம் கட்சிக்கு துரோகம் இழைத்ததால், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுக்கடுவதாக சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்நிலையில், நமச்சிவாயம், தனது வில்லியனுர் தொகுதி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வதாக புதுச்சேரி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளார். அதேபோல, நமச்சிவாயத்திற்கு ஆதர தெரிவித்து, ஊசுடு தொகுதி எம்எல்ஏ தீப்பாஞ்சானும் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் படிக்க... EXCLUSIVE: திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது; எந்த சந்தேகமும் வேண்டாம் - மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மீத அதிருப்தியில் இருந்த நமச்சிவாயம் இரண்டு நாட்களாக, தனியார் விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெகு விரைவாக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் காட்சியின் மாறாத நிலை, அரசு நிர்வாகத்தை சரியாக செயல்படுத்த முடியாத நிலையானது இன்று அல்லது நாளை மாறிவிடும் என எண்ணி ஒரு நற்பாசையில் இருந்தேன். நம்பி உள்ள தொண்டர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறியிருந்தார்.இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்துள்ள நமச்சிவாயம் விரைவில் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நமச்சிவாயம் கட்சிக்கு துரோகம் இழைத்ததால், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுக்கடுவதாக சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்நிலையில், நமச்சிவாயம், தனது வில்லியனுர் தொகுதி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வதாக புதுச்சேரி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளார். அதேபோல, நமச்சிவாயத்திற்கு ஆதர தெரிவித்து, ஊசுடு தொகுதி எம்எல்ஏ தீப்பாஞ்சானும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.