கொரோனா வார்டில் கழிவறையை சுத்தம் செய்த அமைச்சர்!

அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இதுபோன்ற கழப்பறைகளை  சுத்தப்படுத்தும் நவீன கருவிகளை வாங்கி பயன்படுத்துமாறும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், துறை  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கொரோனா வார்டில் கழிவறையை சுத்தம் செய்த அமைச்சர்!
சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
  • News18
  • Last Updated: September 18, 2020, 7:29 PM IST
  • Share this:
புதுச்சேரி அரசின் கொரோனா மருத்துவமனையில் கழிவறையை தூரத்தில் இருந்து சுத்தம் செய்யும் இயந்திரத்தை சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் அறிமுகப்படுத்தியுள்ளார்.

புதுச்சேரி  சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்,  கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு கோவிட் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் திடீர் ஆய்வினை இன்று  மேற்கொண்டார்.

அங்கு ஆக்சிஜன் கருவிகள் அமைக்கும்  பணியை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நேரில் பார்வையிட்டார்.தொடர்ந்து அவர், அங்கு சிகிச்சை பெற்று வரும், கொரானா நோயாளிகளை நேரில் சந்தித்து, அவர்களிடத்தில், சிகிச்சைக்கான மருந்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து  கேட்டறிந்தார்.


அப்போது சில நோயாளிகள் கழிவறை சுத்தமாக இல்லை.தண்ணீர் அடிக்கடி அடைப்பதாக கூறினார்கள். இதற்கு புதிதாக கருவி வாங்கப்பட்டுள்ளது.தூரத்தில் இருந்து சுகாதார பணியாளர்கள் நோய் தொற்று ஏற்படாமல் சுத்தம் செய்ய முடியும் என கூறினார்.Also read... சென்னை : ₹1.2 கோடி மதிப்பிலான திருடப்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

இதனைத் தொடர்ந்து அமைச்சர்  மருத்துவமனையில் உள்ள  கழவறைகளை ஆய்வு செய்தார். அங்கு  உள்ள கழவறைகளை சுத்தப்படுத்த, வாங்கப்பட்டுள்ள புதிய கருவியை கொண்டு  அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கழவறைகளை சுத்தப்படுத்தினார்..இதே போல் சுத்தம் செய்ய ஊழியர்களை அறிவுறுத்தினார்.இதையடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இதுபோன்ற கழப்பறைகளை  சுத்தப்படுத்தும் நவீன கருவிகளை வாங்கி பயன்படுத்துமாறும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், துறை  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading