HOME»NEWS»NATIONAL»puducherry minister argument to admk mla skd

நாங்க விடிய விடிய கூட பேசுவோம் - முதல்வர் நாராயணசாமியை நீண்ட நேரம் பேச வேண்டாம் என்று கூறிய அ.தி.மு.க எம்.எல்.ஏக்கு அமைச்சர் பதில்

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நாராயணசாமி பேச்சை அ.தி.மு.க எம்.எல்.ஏ இடைமறித்ததால் அமைச்சர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நாங்க விடிய விடிய கூட பேசுவோம் - முதல்வர் நாராயணசாமியை நீண்ட நேரம் பேச வேண்டாம் என்று கூறிய அ.தி.மு.க எம்.எல்.ஏக்கு அமைச்சர் பதில்
நாராயணசாமி
  • Share this:

புதுச்சேரி சட்டப்பேரவை 10 மணிக்கு கூடிய நிலையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய அவர், ஐந்து ஆண்டு கால ஆட்சி குறித்து உருக்கமாக பேசி வருகிறார். சட்டப்பேரவையில் பேசிய அவர், ‘இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது...முடிய இன்னும் சில நாட்களே உள்ளது. சோனியாகாந்தி, ஸ்டாலின் ஆதரவால் முதல்வரானேன். நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் மக்கள் எனக்கு அளித்தனர்.
மாநில பட்ஜெட்டில் அறிவித்ததில் 95 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடைபெற்றுவருகிறது. தேர்தல் வாக்குறுதியை காப்பாற்றிய பெருமை எங்கள் அரசுக்கு உண்டு. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எவ்வளவு இக்கட்டு வந்தாலும் புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து போரோடினோம்.

மக்களால் புறக்கணிப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். மாநிலத்தை வருமானத்தை குறைக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினார்கள். புதுச்சேரி மாநிலத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. நான்கு ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர் கட்சிகள் தற்போது அஸ்திரத்தை எடுக்கின்றனர்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து பேசினார்.

அப்போது, அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் குறுக்கிட்டு பொது கூட்டத்தில் பேசுவது போல் பேச வேண்டாம். மாலை 5 மணிக்குள் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டது மறந்துநவிட்டதா என கேள்வி எழுப்பினார். அதற்கு, முதல்வரை பேசவிடவில்லையென்றால் அமைச்சர்கள் அனைவரும் விடிய விடிய பேசுவோம் என்று சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆவேசமாக பதிலளித்தார்.





உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: