கிரண்பேடிக்கு எதிர்ப்பு - அமைச்சர் உட்பட 3 எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

துணைநிலை ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது  உரையை  அமைச்சர் மற்றும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

கிரண்பேடிக்கு எதிர்ப்பு - அமைச்சர் உட்பட 3 எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
வெளிநடப்பு செய்த அமைச்சர் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ.,க்கள்
  • Share this:
புதுச்சேரியில் கொரோனா பணியில் உள்ள மருத்துவர்களை மிரட்டியதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக கிரண்பேடி சில சட்டமன்ற உறுப்பினர்கள் தன் மீது தொடர்ந்து பொய் சொல்வதால் அவர்கள் மன நல மருத்துவரை சந்திப்பது நல்லது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆளுநரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆளும் கட்சியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி இன்று கருப்பு சட்டை அணிந்து சபைக்கு வந்தார். ஆளுநர் கிரண்பேடி உரையாற்ற துவங்கிய உடன் அவர் அவை நடவடிக்கையில் இருந்து வெளியேறினார். அவரை போல சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், முதல்வரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் வெளியேறினார்கள்.

இதில் அமைச்சர் கறுப்பு துண்டு அணிந்திருந்தார். மருத்துவர்களை அவமரியாதை செய்ததற்கு கிரண்பேடி இன்னும் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதால் வெளியேறியதாக கூறினார்.


Also read... புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு - கிரண் பேடி வரும் பாதையை மறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

உறுப்பினர்கள் அவமானப்படுத்தியதால் சட்டமன்றத்தில் வெளியேறிய கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க கறுப்பு நிற கடிகாரம் கட்டி வந்ததாக காண்பித்தனர்.

அதே வேளையில் ஆளுநர் வரவேற்க முதல்வர் வரவில்லை. வழக்கமாக சட்டசபைக்கு ஆளுநர் உரையாற்ற வரும் போது முதல்வரும் சபாநாயகரும் வரவேற்பார்கள். ஆனால் இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் பாலன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.ஆளுனரை எதிர்த்து அமைச்சரும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும்  வெளியேறியது  இதுவே முதல் முறை.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading