புதுச்சேரி : காங்கிரஸ் போராட்டத்தில் 'மைக் செட்' பறிமுதல் செய்த போலீசார்

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் உரிய அனுமதி இல்லாததால் மைக்செட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி : காங்கிரஸ் போராட்டத்தில் 'மைக் செட்' பறிமுதல் செய்த போலீசார்
பறிமுதல் செய்யப்ட்ட மைக்செட்
  • Share this:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த அடிப்படையில் வில்லியனூரில்மங்களம் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய பாஜக அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியும் விலையேற்றத்திற்கு காரனமான பெட்ரோல், டீசல் விலைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர் .


காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி  பெறவில்லை எனக்கூறி போலீசார் ஒலிபெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்து சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading