கொரோனா ஊரடங்கால் முடங்கிய தொழில்: தேநீர் விற்று புதிய பாதையை அமைத்துக் கொண்ட எம்.பி.ஏ பட்டதாரி

புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கால் தொழில் முடங்கிய நிலையில், டீ விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார் எம்.பி.ஏ பட்டாரி இளைஞர்.

கொரோனா ஊரடங்கால் முடங்கிய தொழில்: தேநீர் விற்று புதிய பாதையை அமைத்துக் கொண்ட எம்.பி.ஏ பட்டதாரி
புதுச்சேரி எம்.பி.ஏ பட்டதாரி
  • Share this:
புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் சபாபதி. இவர், MBA பட்டதாரி. இவர் சொந்தமாக செல்போன் சர்வீஸ் மற்றும் கணனி சரிபார்க்கும் கடை நடத்தி வந்தார். கொரோனா காரணமாக இவரது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் 4 மாதங்களாய் வேலை இல்லாமல் கடையை மூடி வைத்திருந்தார். வீட்டு வாடகை மற்றும் கடை வாடகையை கொடுக்க முடியாததால் கடையை மூடிவிட்டு மாற்று வேலைக்கு செல்லாமல் என்று சிந்தித்து தற்போது மக்களின் அத்தியாவசிய தேவையான எதிர்ப்பு சக்தி தரும் பானம் விற்க முடிவெடுத்தார்.

கடந்த  10 நாட்களாக கடற்கரை சாலையில் விடியற்காலை 5 மணி முதல் தனது இருசக்கர வாகனத்தையே விற்பனை வாகனமாக்கி  நோய் எதிர்ப்பு சக்தி தேனீரை விற்று வருகின்றார். கொரோனா பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. தன்னுடைய தொழில் முடங்கியதால் எதிர்ப்பு சக்தி தேனீரை விற்க முடிவு செய்ததாகவும் கூறுகிறார் சபாபதி.

சூடான சீரக நீரில் தேன், இஞ்சி, புதினா, எலுமிச்சை ஆகியவற்றை கலந்து உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தேனீரை விற்க துவங்கியதாகவும் MBA படித்து விட்டு நல்ல தொழில் செய்த நாம் இப்படி தேனீர் விற்பதா...? என  முதலில் சங்கடப்பட்டாலும் ஏதாவது ஒரு வகையிலும் வருமானத்தை ஈட்ட கொரோனா கத்து கொடுத்துள்ளது. அடுத்து ஒரு கடையை போட்டு தேனீர் விற்க திட்டமிட்டுள்ளதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


Also see:
First published: June 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading