Home /News /national /

புதுச்சேரி அரசு நடத்தும் கடற்கரை திருவிழா: கண்ணை கவர்ந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி

புதுச்சேரி அரசு நடத்தும் கடற்கரை திருவிழா: கண்ணை கவர்ந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி

ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி

ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி

Puducherry | புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக நடைபெறும் கடற்கரை திருவிழாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



புதுச்சேரியில் நடைபெற்று வரும் கடற்கரை திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.


புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக நடைபெறும் கடற்கரை திருவிழாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் வெளியில் வரமுடியாமல் இருந்த மக்களை ஈர்க்கும் விதமாகவும், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகவும் புதுச்சேரி அரசு நான்கு நாட்கள் நடைபெறும் கடற்கரை திருவிழாவை நடத்துகிறது.


இந்த விழாவை காண தமிழ்நாடு, கர்நாடாகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.




விழாவின் ஒருபகுதியாக ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, பெங்களூரு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் பங்கேற்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி