புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் தங்கத்தேர் பாகங்கள் திருட்டு...ஆளுநர் கிரண்பேடியிடம் கோவில் நிர்வாகி புகார்

மணக்குள விநாயகர் கோவில்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் தங்கத்தேரின் பாகங்கள் காணவில்லை என ஆளுநர் கிரண்பேடியிடம் கோவில் நிர்வாகி புகார் அளித்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் உலக புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கென ஒரு தங்கத்தேர் உள்ள போதிலும், 1989-ஆம் ஆண்டு புதுச்சேரி வெள்ளாளர் வீதியிலுள்ள நந்திகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தங்கத்தேரும் மணக்குள விநாயகர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த தங்கத்தேரின் சிற்பங்களும், அடிப்பாகங்களும் காணவில்லை என கோவில் பாதுகாப்பு கமிட்டி செயலாளர் தஷ்ணாமூர்த்தி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

வரலாற்று பின்னணி கொண்ட இந்த தங்கத்தேரில் பாகங்களை மீட்டு பாதுகாக்க வேண்டுமென ஆளுநருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.கோவில் தங்கத்தேர் பாகங்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: