Home /News /national /

ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக ரூ.59 லட்சம் மோசடி செய்த நபர் கைது!

ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக ரூ.59 லட்சம் மோசடி செய்த நபர் கைது!

ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.59 லட்சம் வரை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.59 லட்சம் வரை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.59 லட்சம் வரை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (69). கம்பன் நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பரும், பாஜக பிரமுகருமான செல்வத்திடம் தனது மகன் பட்டபடிப்பு முடித்துவிட்டு தன்னுடன்  கடையில் வேலை செய்து வருவதாகவும், அவருக்கு ஏதேனும் அரசு துறையில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து செல்வம், தனக்கு ஜிப்மர் இயக்குனரிடம் உதவியாளராக பணிபுரியும் மணிகண்டன் என்பரை தெரியும் என்று கூறி கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் மணிகண்டனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து ஜனவரி மாதம் பிரபாகரனிடம் மணிகண்டன் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சத்தை தனது வங்கி கணக்கின் மூலம் பெற்றுள்ளார்.

இதுமட்டுமன்றி பிரபாகரன் தனக்கு தெரிந்த சிலரையும் அறிமுகப்படுத்தி அவர்களிடமும் ஜிப்மரில் செவிலியர், வரவேற்பாளர், உதவியாளர் போன்ற  பணிகளை மணிகண்டன் வாங்கி தருவார் என கூறி ரூபாய் 59 லட்சம் வரை பெற்று தந்துள்ளார். மணிகண்டனும் சிலருக்கு பணி ஆணையை அனுப்பியுள்ளார். பின்னர் போன் செய்து இன்னும் வேலை தயாராகவில்லை. அதனால் இப்போது செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

இதில் சுரேஷ் என்பவர் மட்டும் ஜிப்மருக்கு சென்று தனது பணி ஆணையை காண்பித்துள்ளார், அப்போதுதான் அது போலியாக ஆணை  என தெரியவந்தது. இதனையடுத்து  மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரபாகரன் ரெட்டியார்பாளயம் காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

'அஜித், விஜயை விட காந்தி, வ.உ.சிக்கு தட்டும் கைதட்டல் அதிகமாக இருக்க வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜன்

இதனிடையே ஜிப்மர் நிர்வாகம் நடத்திய விசாரணையில் சிலர் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி இருப்பது ஆதாரத்துடன் தெரிய வந்தது. இதனால் 5க்கும் மேற்பட்டோரை ஜிப்மர் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் சிலரை நீக்கம் செய்ய விசாரணை செய்து வருவதாக தெரிகிறது.

புதுச்சேரியில் இயங்கிவரும் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மரில் செவிலியர், உதவியாளர், தொழில்நுட்ப பணியாளர் என பல்வேறு பணிகளுக்கு வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்கான விளம்பரம் செய்யப்பட்டது. முற்றிலும் தகுதி அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள தகுதி உடையவர்களை கொண்டுதான் இந்த தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறுக்கு வழியில் இந்த பதவிகளைப் பெறுவதற்கு சிலர் முயற்சி கொள்கின்றனர். அவற்றையெல்லாம் நம்ப வேண்டாம் என நிர்வாகம் பல முறை எச்சரித்தும் இதுபோன்ற தவறுகள் நடைபெறுகிறது. இந்த தவறுக்கு நிர்வாகத்தில்  யாராவது  உறுதுணையாக இருந்தால் அவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Published by:Esakki Raja
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி