• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் ஒரு மாதத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரியில் ஒரு மாதத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன்

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன்

புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகமாக அதிகரிப்பதால் அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்தவும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுச்சேரியில் ஒரு மாதத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டமுள்ளது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு ஆம்புலன்ஸ் சேவையை நேற்று தொடக்கி வைத்த பின் துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. புதுச்சேரியில் ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும்  தடுப்பு ஊசி போட திட்டமுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் 11 மாநிலங்கள் அபாயகரமான கட்டத்தில் உள்ளது. அதில் புதுச்சேரி மாநிலம் இல்லை. அதனால் ஊரடங்கிற்கு தற்போது அவசியம் இல்லை. அந்த நிலைக்கு தள்ளிவிடாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

புதுச்சேரியில் தேவையான படுக்கை வசதிகள் உள்ளது. பொதுமக்களோடு அதிகம் தொடர்புடைய ஆட்டோ, டெம்போ மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் குமரனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் கூறுகையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகை செய்தித்தொடர்பாளர் குமரனுக்கு உடல் நல பாதிப்பால் ஆளுநர் மாளிகை வரவில்லை. வீட்டில் இருந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகை ஊழியர்கள் பரிசோதனை எடுத்துக்கொள்ள தெரிவித்துள்ளோம் என்று குறிப்பிட்டனர்.

இதே போல் புதுச்சேரி  பாஜக மாநிலத் தலைவரும் லாஸ்பேட்டை தொகுதி வேட்பாளருமான சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜகவின்  முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி ஆகியோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also read... கொரோனா: தமிழக அரசு விதித்துள்ள முக்கிய 10 புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

இதனிடையே புதுச்சேரியில் கொரோனா தாக்கத்தை குறைக்க தடுப்பூசியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இன்று அனைத்து உணவக ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கும், 10-ம் தேதி வங்கி ஊழியர்கள் (அரசு மற்றும் தனியார் LIC ஊழியர்கள்உட்பட) மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கும், 13-ம் தேதி முதல் பாண்லே பால் வினியோகம் செய்யும் ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கும்
வரும் 15-ம்தேதி முதல் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கும் இந்த தடுப்பூசி முகாம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் நடைபெறும் எனவும் அட்டவணைக்கு ஏற்றாற் போல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகமாக அதிகரிப்பதால் அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்தவும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: