புதுச்சேரியில் நாளை முதல் நீண்ட வழித்தட பேருந்து சேவைகள் தொடக்கம்!

புதுச்சேரியில் நாளை முதல் நீண்ட வழித்தட பேருந்து சேவைகள் தொடக்கம்!

புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கினால் நிறுத்தப்பட்டிருந்த நீண்ட வழித்தட பேருந்து சேவைகள் மீண்டும் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

 • Share this:
  புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, திருப்பதி, குமுளி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு நாளை முதல் பேருந்து சேவை தொடங்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

  புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகம் (PRTC) மூலம் புதுச்சேரி - பெங்களூரு, புதுச்சேரி - திருப்பதி, புதுச்சேரி -குமுளி
  மற்றும் புதுச்சேரி - ஓசூர் ஆகிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  Also read: தபால் நிலையத்தில் செல்வமகள் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட லட்சக்கணக்கான பணம் மாயம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

  கொரோனா ஊரடங்கினால் நிறுத்தப்பட்டிருந்த நீண்ட வழித்தட பேருந்து சேவைகள் மீண்டும் நாளை (28.08.2021) முதல் தொடங்கப்பட உள்ளது.

  மேலும் சபாநாயகர், சமூகநல அமைச்சர் ஆகியோரின் கோரிக்கைகளின் பேரில், புதுச்சேரி கிராமப் பகுதிகளில் நோனாங்குப்பம்- நாவற்குளம், அபிஷேகப்பாக்கம்-கீழ் அக்ராஹரம் மற்றும் புவன்கரே வீதி (மினி பேருந்து) ஆகிய வழித்தடங்களில் PRTC பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: