முகப்பு /செய்தி /இந்தியா / 25 கோடி ரூபாய் மதிப்பிலான செங்கல்கள் மண்ணாகக் கரையும் அபாயம்..!

25 கோடி ரூபாய் மதிப்பிலான செங்கல்கள் மண்ணாகக் கரையும் அபாயம்..!

5 கோடிகளுக்கும் மேலாக பச்சை செங்கல்கள் அறுத்து வைத்து இவற்றை வேகவைப்பதற்கு  மூலப்பொருட்கள் இல்லாமல் பாழ்படுகிறது.

5 கோடிகளுக்கும் மேலாக பச்சை செங்கல்கள் அறுத்து வைத்து இவற்றை வேகவைப்பதற்கு  மூலப்பொருட்கள் இல்லாமல் பாழ்படுகிறது.

5 கோடிகளுக்கும் மேலாக பச்சை செங்கல்கள் அறுத்து வைத்து இவற்றை வேகவைப்பதற்கு  மூலப்பொருட்கள் இல்லாமல் பாழ்படுகிறது.

  • Last Updated :

ஊரடங்கு காரணமாக அனைத்து நடுத்தரத் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான செங்கல்கள் மண்ணாகக் கரையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுவை கிராமப்புறங்களில் செங்கல் தயாரிக்கும் தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆனால் ஊரடங்கு உத்தரவால் வம்புபட்டு, சோரப்பட்டு, செல்லிப்பட்டு, விநாயகம்பட்டு, நெற்குணம், கலித்திறம் பட்டு ஆகிய கிராமங்களில் 5 கோடிகளுக்கும் மேலாக பச்சை செங்கல்கள் அறுத்து வைத்து இவற்றை வேகவைப்பதற்கு  மூலப்பொருட்கள் இல்லாமல் பாழ்படுகிறது.

மழை பெய்தால்  தார்பாய் போட்டு மூடிவைக்க முடியாமல் கிடக்கும் இவற்றின் மதிப்பு 25 கோடி ரூபாய் என கவலையுடன் தெரிவிக்கின்றனர் செங்கல் தொழில் செய்பவர்கள். மேலும், இங்கு கூலி வேலை செய்யும் பெண்களின் கணவர்கள் யாரும் வேலைக்குப் போக இயலாததால் தங்களின் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்காக தமக்குத் தெரியாத வேலைகளை இங்கு வந்து செய்து வருவதாகவும், இதன் மூலம்தான் தம் குடும்பத்தைக் காப்பாற்றுவதாகவும் கவலையுடன் தெரிவித்தனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Lockdown, Puducherry