புதுச்சேரி: கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லையெனில் மதுபான கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து..

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிடில் மதுபான கடைகளின் உரிமம் தற்காலிக ரத்து என கலால் துறை எச்சரித்துள்ளது.

  • Share this:
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு கட்டுப்பாடுகளை கலால் துறை அறிவித்துள்ளது.

கோவிட் 19 காரணமாக மத்திய -மாநில அரசுகள் கூறிய பாதுகாப்பு வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும், மதுபானங்கள் விற்கப்படும் கடைகளில் கால இடைவெளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி அளிக்க வேண்டும், ஊழியர்கள் அடிக்கடி கை கழுவுதல் செய்ய வேண்டும், முகக்கவசம் அணிந்து வராதவர்களுக்கு மதுபானங்கள் விற்க கூடாது, தனிமனித இடைவேளை குறிக்கும் வகையில் வட்டமோ கட்டமோ போட்டிருக்க வேண்டும், கடைகளுக்கு முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படவேண்டும், மதுபானம் தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் ஊழியர்களுக்கு கொரோனோ தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும்.

அரசு குறிப்பிட்ட நேரத்தை தாண்டி மதுபானம் விற்கக்கூடாது, இவற்றில் ஏதேனும் அத்துடந்தால் மீறல்கள் மதுபான கடைகளில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை துணை ஆணையர் சுதாகர் எச்சரித்துள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published: