Home /News /national /

தடுப்பூசிக்கு பயந்து கடையை மூடிய ஊழியர்கள்.. மடக்கிப் பிடித்து ஊசி போட வைத்த ஆளுநர்

தடுப்பூசிக்கு பயந்து கடையை மூடிய ஊழியர்கள்.. மடக்கிப் பிடித்து ஊசி போட வைத்த ஆளுநர்

புதுச்சேரி

புதுச்சேரி

புதுச்சேரியில் 2022 பிறக்கும்பொழுது கொரோனா இல்லாத புதுச்சேரி ஆக உருவாக வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் கொரோனா பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி, பாரதி வீதியில் வீடு/கடைகள் தோறும் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை  துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு செய்தார்.
பொதுமக்கள், நடைபாதை வியாபாரிகள், கடை ஊழியர்கள் ஆகியோரிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆவணம் விவரங்களைக் கேட்டறிந்தார்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருந்தவர்களைப் பாராட்டினார். ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.
இதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அதே இடத்தில் தடுப்பூசி செலுத்தியும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர். இந்த நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாரதி வீதியில் அவரே நேரடியாக கடை கடையாக ஏறி தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா.என கேட்டு ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 43 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி - அமைச்சர் மா.சுப்ரமணியன்

தடுப்புச் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அதற்கான காரணங்களை கேட்டு அதே இடத்தில் அவர்களுக்கு தடுப்பூசியும் செலுத்தினார். மேலும் கவர்னரின் ஆய்வுக்கு பயந்து ஒரு சில வியாபாரிகள் கடையை மூடி விட்டு புறப்பட தயாராக இருந்த போது அவர்களை மடக்கி பிடித்து கவர்னர் தடுப்பூசி போட சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ," புதுச்சேரியில் 2022 பிறக்கும்பொழுது கொரோனா இல்லாத புதுச்சேரி ஆக உருவாக வேண்டும். அதற்கு தடுப்பூசி கட்டாயம் அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அரசு தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தவில்லை அதேவேளையில் கட்டாயமாக அனைவரும் தடுப்பூசி தானாக செலுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:  Madurai AIIMS : மதுரை எய்ம்ஸ்-ல் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதுவரை புதுச்சேரியில் முதல் தவணை தடுப்பூசி  8,17,755 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 5 ,34,251 பேரும் செலுத்திக் கொண்டு உள்ளனர். புதுச்சேரியில் மொத்தமாக 13,52,006 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.
புத்தாண்டுக்கு புதுச்சேரிக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த துணைநிலை ஆளுநர், கொரோனாவோடு வாழ நாமும் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.ஆய்வின்போது காதாரத்துறைச் செயலர் உதயகுமார், சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர். புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

.
Published by:Ramprasath H
First published:

Tags: Corona, Corona Vaccine, Cowin, Dr tamilisai soundararajan, Pudhucherry, Tamilisai Soundararajan

அடுத்த செய்தி