Latest Tamil News : தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் செய்திகள் உள்ளூர் நிகழ்வுகள் உடனுக்குடன்

தமிழ்நாடு , புதுச்சேரி தேர்தல் கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், கொரோனா அப்டேட் உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | April 22, 2021, 13:14 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A YEAR AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  13:12 (IST)

  மயிலாடுதுறை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சம்சுதீன், பிரசார வாகனத்தை கயிறு கட்டி இழுத்தபடி வாக்கு சேகரித்தார். டீசல் விலை உயர்வைக் கண்டித்து, இவ்வாறு நூதன முறையில் வாக்குசேகரித்தார்.

  13:12 (IST)

  கொரோனா பரவலை தொடர்ந்து, பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார். இந்நிலையில், 15 மாதங்களுக்குப் பிறகு, வங்கதேசத்தின் 50வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் சுற்றுப் பயணமாக மோடி அங்கு சென்றுள்ளார். பிரதமருக்கான பிரதேயக விமானத்தில் பயணம் செய்து டாக்கா சென்றடைந்த அவரை, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா வரவேற்றார். தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு, முப்படைகளின் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

  13:12 (IST)

  ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் திருப்பதி திருமலையில் இருந்து ஊர் திரும்ப முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர். விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு இரும்பாலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் ஒய்எஸ்ஆர், தெலுங்கு தேசம் உட்பட அனைத்து கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டதால், திருப்பதி திருமலைக்கு வந்திருந்த பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். இருப்பினும் பகல் ஒரு மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

  13:0 (IST)


  அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில கூட்டம் நடைபெற்றது.
  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட திமுகவிற்க்கு நடைபெறயுள்ள சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய ஆதரவை தெரிவிப்பதாகவும்,குறிப்பாக கொள்ளிடத்தில் ஆற்றில் தடுப்பனை கட்டப்படும் என அறிவித்ததை வரவேற்கிறோம் எனவும், மருதையாறு, வெள்ளாறு தடுப்பனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்

  12:59 (IST)

  கேமாராக்கள் பொருத்தும் பணிக்காக நாளைமுதல் பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு

  12:59 (IST)

  உதகையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் விதமாக காவல் துறை கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

  பதற்றமான வாக்கு சாவடிகள் அமைந்துள்ள எல்கில், பாம்பேகேஷில்,  ஜெ.எஸ்.எஸ், ஏடிசி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் துணை ராணுவ படையினர் மற்றும்  உள்ளூர் போலிசார் அணி வகுப்பு நடத்தினர்.

  12:59 (IST)

  நெல்லை பாளையங்கோட்டையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கையில் நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 5 லட்சம் பணம் பறிமுதல்

  12:56 (IST)

  தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை

  12:51 (IST)

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

  மருத்துவக்கல்லூரி வாயில் முன்பு மாணவர்கள் சுமார் 200 போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அரசு கல்லூரியான இங்கு அரசாணைப்படி கல்விக் கட்டணம் வசூலிக்க வலியுறுத்தி இன்று 29-வது நாள் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.இன்றைய போராட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக நடத்தி வருகின்றனர்

  தமிழ்நாடு , புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தல் (Assembly election 2021 ) இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் கள செய்திகள், கொரோனா பரவல் (CoronaVirus), தடுப்பூசி (Corona vaccine ) உள்ளிட்ட அப்டேட்கள், மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகள் தேர்தல் பிரசாரங்கள், தேசிய, உலக நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் இங்கே அறியலாம்.