புதுச்சேரி: காங்கிரசிலிருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார் லட்சுமி நாராயணன்

ரங்கசாமி - லட்சுமி நாராயணன்

ஆளும்கட்சியில் இருந்தபோதும், மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக் கூடியவர் லட்சுமி நாராயணன்...

 • Share this:
  புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதனால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

  இந்நிலையில், புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

  இதனால், காங்கிரசில் இருந்து வெளியேறிய லட்சுமி நாராயணன், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார்.

  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, “லட்சுமி நாராயணன் இணைந்தது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுவூட்டி இருக்கிறது. நான் முதலமைச்சராக இருந்த போதே, நல்ல முறையில் பணியாற்றியவர் லட்சுமி நாராயணன்.

  ஆளும்கட்சியில் இருந்தபோதும், மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக் கூடியவர் லட்சுமி நாராயணன். காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை” என்று கூறினார்.

  இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்குமா அல்லது தனித்து களம் காணுமா என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் சில நாட்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  Must Read : புதுச்சேரியில் முழுநேரம் செயல்பட தொடங்கிய பள்ளிகள்.. கொரோனா தொற்றுப்பரவல் குறைந்ததை தொடர்ந்து நடவடிக்கை..

   

  புதுச்சேரியில் தமிழகத்தைப் பேலவே தேர்தல் அட்டவணை இருப்பதால், அங்கும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: