எனது சிறிய பங்களிப்பைத் தருவதை கடமையாக உணர்கிறேன்..! - கிரண் பேடி

எனது சிறிய பங்களிப்பை தருவதை கடமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார் கிரண் பேடி.

எனது சிறிய பங்களிப்பைத் தருவதை கடமையாக உணர்கிறேன்..! - கிரண் பேடி
எனது சிறிய பங்களிப்பை தருவதை கடமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார் கிரண் பேடி.
  • Share this:
”எனது ஊதியத்தில் 30 சதவிதத்தை தானாக முன்வந்து குறைக்க ஒப்பு கொள்கிறேன். எனது சிறிய பங்களிப்பை தருவதை கடமையாக உணர்கிறேன்” என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஜனாதிபதிக்கு  கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,கொரோனா வைரஸால் நாடு முன் எப்போதும் எதிர்பார்க்காத நெருக்கடியை எதிர்கொள்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உலகளவில் உருவாகிய அழிவைக் கட்டுப்படுத்த போராடுகிறது என்றும்  கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலில் பல வளர்ந்த பணக்கார நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா திறமையான தலைமையில் கீழ் வெல்கிறது.

குறிப்பாக  பிரதமரின் வேண்டுகோளுக்கினங்க அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா உறுதியுடன் ஒன்றிணைந்ததுள்ளது உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.இந்தியர்கள் தங்கள் தலைவரான பிரதமர் மோடியை எவ்வளவு நம்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.கொரோனா காரணமாக நாடு அதிக பொருளாதார செலவில் உள்ளது. இது ஏழைகளை அதிகம் பாதிக்கிறது. துன்பங்களை உடன் தணிக்க பல நிவாரண நடவடிக்கைகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. இது ஒரு ஆரம்பம் என்பதை நாம் அறிவோம் என கூறியுள்ள கிரண்பேடி, இந்த நிதியாண்டுக்கான தனது ஊதியத்தில் 30 சதவிதத்தை தானாக முன்வந்து குறைக்க ஒப்பு கொள்கிறேன். எனது சிறிய பங்களிப்பை தருவதை கடமையாக உணர்கிறேன். இந்த சிறிய பங்களிப்புக்கு தங்கள் ஆசிர்வாதங்களை கோருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading