பொறுப்பற்ற மக்களுக்கு இலவச சிகிச்சையா? புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஆவேசம்..

kiranbedi

மிக பொறுப்பற்ற நடத்தை  கொண்ட மக்களை நமது அரசு நிர்வகிக்க வேண்டிய சூழலில் இருக்கிறது எனவும் கிரண்பேடி தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரி துணைநிலை கிரண்பேடி வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் இன்னும் கொரோனா அதிகரிப்பது ஏன்? என்ற கேள்வியெழுப்பி அவரே ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

”மக்கள் சட்டத்தை பின்பற்றவில்லை.ஊரடங்கு தளர்வு அளித்தவுடன் பல இடங்களில் ஒரு மைல் தூரத்திற்கு மக்கள் முண்டியடித்து  கொண்டு  நின்று மதுபாட்டிலை வாங்கி சென்றனர்” என ஆவேசப்பட்டுள்ளார்.

”விநாயகர் சதுர்த்திக்கு பொருட்களை வாங்க பல இடங்களில் மக்கள் கூட்டம் மிகுந்தது. வெளியே வராமல் வீட்டிலேயே  கொண்டாட அறிவுறுத்தியும் யாரும் மதிக்கவில்லை. அனைவரும் வெளியே கடைக்கு சென்று கும்பலாக கலந்து பொருட்களை வாங்கி கொண்டாடினார்கள்.இதனால் நோய் தொற்று அதிகமாகும் என சுட்டிகாட்டியுள்ள அவர், இப்படி நோய் பரப்புவதால் ஒவ்வொருவருக்கும் ஆயிரக்கணக்கில் மக்கள் பணம் செலவிட வேண்டியுள்ளது. ஒவ்வொருருக்கும் மருத்துவர், செவிலியர், மருந்து, வெண்டிலேட்டர், மருத்துவமனை என தேவைப்படுகிறது.

மேலும் படிக்க: 12000 ரத்த மாதிரிகள்.. சென்னையில் 50% பேருக்கு நோய் எதிர்ப்புத் திறன்.. ஆய்வு சொல்வது என்ன?

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சட்ட விதிகளை மீறுபவர்கள் எப்படி இலவச சிகிச்சை கேட்க முடியும்? எதற்காக அரசிடம் வருகிறார்கள், பணம் கட்டி சிகிச்சை பெற வேண்டியதுதானே?என அடுக்கடுக்காக ஆவேசமாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.நாங்கள் வரி செலுத்துகிறோமே என கேட்கலாம். அனைவரும் மறைமுக வரி செலுத்துகிறோம். ஆனால் நேரடி வரியை எவ்வளவு பேர் செலுத்துகிறார்கள்?ஒரு பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் உண்மையில் சில கோடி பேர் மட்டுமே வரி செலுத்துகிறார்கள்.மிக பொறுப்பற்ற நடத்தை  கொண்ட மக்களை நமது அரசு நிர்வகிக்க வேண்டிய சூழலில் இருக்கிறது எனவும் கிரண்பேடி தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
Published by:Gunavathy
First published: