துப்புரவு தொழிலாளர்களுடன் பொங்கல் கொண்டாடிய கிரண்பேடி! ரவுடி பேபி பாடலுக்கு ஆட்டம்போட்ட மூதாட்டி

துப்புரவு தொழிலாளர்களுடன் பொங்கல் கொண்டாடிய கிரண்பேடி! ரவுடி பேபி பாடலுக்கு ஆட்டம்போட்ட மூதாட்டி
கிரண்பேடி
  • Share this:
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துப்புரவு தொழிலாளர் ஒருவர் ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் மாளிகையில், துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களுடன் இணைந்து பொங்கல் விழாவைக் கொண்டாடினார்.

அவர்களுக்கு பரிசுப் பொருள்களும் வழங்கினார். இந்த விழாவில் சுமார் 1,500 பெண் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த பொங்கல் கொண்டாட்டத்தின்போது, மூதாட்டி ஒருவர், தனுஷ் நடித்த ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடியது அனைவரையும் மனதையும் கவர்ந்தது. இந்த வீடியோவை செல்போனில் பதிவு செய்த கிரண்பேடி அதனை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also see:

First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்