Home /News /national /

ஆன்லைன் மூலம் கடன் பெற்றுத் தருவதாக கூறி சக ஊழியர்களிடம் பண மோசடி.. கரூர் வாலிபர் கைது!

ஆன்லைன் மூலம் கடன் பெற்றுத் தருவதாக கூறி சக ஊழியர்களிடம் பண மோசடி.. கரூர் வாலிபர் கைது!

கடன் தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தவணைத் தொகை செலுத்த உத்தரவு வந்துள்ளது. இதனால் சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அபிநயா என்பவர் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு அஜித் குமார் என்பவர் தன்னிடம் பண மோசடி செய்ததாக புகார் தெரிவித்தார்.

இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது பணமோசடியில் ஈடுபட்ட அஜித்குமார் என்பவர் கரூர் மாவட்டம் குச்சிப்பாளையம் தாலுகா வாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் இவர் கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரி நூறடி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அங்கு உடன் பணி செய்தவர்கள் இடம் ஆன்லைன் மூலம் கடன் பெற்றுத் தருவதாக கூறி அவர்களின் ஆவணங்களை கொண்டு ஆன்லைன் வர்த்தகம் மூலம் கடன் தொகை பெற்றுள்ளார். இதனை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் செலவு செய்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கான உரிமை எந்த வகையிலும் மறுக்கப்படாது... தமிழிசை உறுதி.

இதனிடையே கடன் தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தவணைத் தொகை செலுத்த உத்தரவு வந்துள்ளது. இதனால் சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இவர்கள் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். உடனடியாக பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடிய நிலையில் அரியாங்குப்பம் பகுதியில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது இவர் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் இதுபோன்ற நூதன முறையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் தமிழக காவல்துறையினரால் தேடப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது இதனையடுத்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Fraud, Puducherry

அடுத்த செய்தி