புதுவையில் கறுப்பர் கூட்டம் சுரேந்தரைக் கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

புதுச்சேரியில் இருந்த கறுப்பர் கூட்டம் சுரேந்தரைக் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுவையில் கறுப்பர் கூட்டம் சுரேந்தரைக் கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
புதுச்சேரியில் இருந்த கறுப்பர் கூட்டம் சுரேந்தரைக் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
  • Share this:
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் தொகுப்பாளர் சுரேந்தர் கந்த சஷ்டி கவசம் பக்திப் பாடலை அவமதித்ததற்காக தமிழகத்தில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டது. போலீசார் அவரைத் தேடிவந்த நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் இருந்த அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் சரணடைவதாகத் தெரிவித்தார்.

இதற்காக கடந்த 16ம் தேதி மாலை 3.30 மணியில் இருந்து அவர் அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியில் பெரியார் படிப்பகம் அருகே காத்திருந்தார். அவருக்கு ஆதரவாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உடனிருந்தனர். மாலை 4.30 மணிக்கு தமிழக போலீசார் புதுச்சேரிக்கு வந்து அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Also read: கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் மீது சேலம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு


இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் உரிய அனுமதியின்றி இ-பாஸ் பெறாமல் புதுச்சேரிக்குள் நுழைந்தது, அரியாங்குப்பம் பகுதியில் அனுமதியின்றி கூட்டம் கூட்டியது மற்றும் முகக்கவசம் அணியாமல் கூட்டத்தோடு இருந்தது ஆகியவற்றுக்காக மனவெளி கிராம நிர்வாக அதிகாரி செல்வி அளித்த புகாரை அடுத்து, சுரேந்தர் மற்றும் அவருடன் இருந்த 5க்கும் மேற்பட்டவர்கள் மீது அரியாங்குப்பம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
First published: July 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading